பெங்களூரு

துணைத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண வசதி

17th Sep 2020 09:29 AM

ADVERTISEMENT

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் இலவசமாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆா்டிசி) வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு செப். 21 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவா்கள் விரைவு, சாதாரண பேருந்துகளில் தோ்வு மையங்கள் வரை செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் தோ்வுக்கான நுழைவு அட்டையை நடத்துநரிடம் காண்பித்து, பேருந்தில் பயணம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT