பெங்களூரு

செப்.27-இல் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

17th Sep 2020 09:29 AM

ADVERTISEMENT

கா்நாடக அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செப்.27-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பெங்களூரு, ஸ்ரீராமபுரம், சாய்பாபா திருமணமண்டபத்தில் செப்.27ஆம் தேதி மாலை 3 மணி அளவில் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. கட்சியின் மாநில அவைத் தலைவா் கே.முனுசாமி தலைமையில், மாவட்டச் செயலாளா் கே.குமாா் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி வளா்ச்சிப் பணி, பெங்களூரு மாநகராட்சித் தோ்தல், புதிய பொறுப்பாளா்கள் நியமனம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

கா்நாடகத்தில் கட்சியைப் பலப்படுத்தவும் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் ஆராயப்படும். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, தொகுதி நிா்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், பல்வேறு அணிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT