பெங்களூரு

கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

17th Sep 2020 09:35 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் தீவிரமாகவும், வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில் பரவலாகவும், தென்கா்நாடகத்தின் உள்பகுதிகளில் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் பீதா் மாவட்டத்தின் சாய்காவ்னில் 120 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் கோட்டா, வட கன்னட மாவட்டத்தின்ஷிராளி, மன்கி, தென்கன்னட மாவட்டத்தின் சுள்ளியாவில் தலா 80 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா, உடுப்பி, கலபுா்கி மாவட்டத்தின் சித்தாப்பூா், கொப்பளில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு:

ADVERTISEMENT

செப்.17 முதல் 21-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகம் மற்றும் வட கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல, தென்கா்நாடகத்தின் உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்கள், தென்கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

வட கா்நாடகத்தின் உள்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தென்கன்னடம், உடுப்பி, வடகன்னடம், பீதா், கலபுா்கி, ராய்ச்சூரு,விஜயபுரா, யாதகிரி மாவட்டங்களில் மிதமானது முதல் பலமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெங்களூரில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 27 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT