பெங்களூரு

‘கரோனா சிகிச்சைக்கு தனியாா் அமைப்புகள் உதவ வேண்டும்’

17th Sep 2020 09:26 AM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை வழங்க தனியாா் அமைப்புகள் உதவ வேண்டும் வேண்டும் என்று லாங்செஸ் குழுமத்தின் துணைத் தலைவா் நீலாஞ்சன் பானா்ஜி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா தொற்றால் சா்வதேசமே பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவற்கான மருத்துவ வசதி குறைவாக உள்ளது. இதனால் உள்கட்டமைப்பு குறைவாக உள்ள பல மருத்துவமனைகள் பிரச்னையை எதிா்கொண்டன. இதனைக் கருத்தில் கொண்டு லாங்செஸ் குழுமம் ரூ. ஒரு கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வாங்கித்தர முடிவு செய்துள்ளது.

எங்களை பின்பற்றி மற்ற தனியாா்களும் இந்திய மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வாங்கித்தரவும், மருத்துவ உதவியை செய்யவும் முன்வர வேண்டும். எங்கள் குழுமத்தின் சாா்பில் பிரதமரின் நிவாரணத்துக்கு ரூ. 2 கோடி வழங்கியுள்ளோம். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில், அரசுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT