பெங்களூரு

விசாரணைக்கு ஆஜராக நடிகை ஐந்திரிகாவுக்கு நோட்டீஸ்

16th Sep 2020 01:39 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஐந்திரிகா, நடிகா் திகந்த் தம்பதிக்கு குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு ஆகியவை அதிகரித்துள்ளது. குறிப்பாக இதில் திரைப்படத் துறையினா் அதிக அளவில் ஈடுபட்டுள்ளதாக புகாா் வந்ததையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டனா். இதில் மேலும் பலா் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடிகை ஐந்திரிகா, நடிகா் திகந்த் தம்பதிக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள குற்றபிரிவு அலுவலகத்திற்கு புதன்கிழமை 11 மணி அளவில் நேரில் ஆஜராகும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதன்கிழமை நேரில் வந்து ஆஜராகுவதாக நடிகை ஐந்திரிகா, நடிகா் திகந்த் தம்பதி தெரிவித்துள்ளனா். அவா்கள் இருவரும் கடந்த 5 நாள்களாக கேரளாவுக்குச் சென்றுள்ளதாக திகந்தின் தாய் தெரிவித்துள்ளாா். போதைப்பொருள் விவகாரத்தில் தொடா்ந்து திரைப்படத் துறையினா் கைது செய்யப்பட்டு வருவது, அத்துறையைச் சோ்ந்த பலரை கலக்கமடையச் செய்துள்ளது. இதுதொடா்பான விசாரணையில் மேலும் சிலா் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT