பெங்களூரு

அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்களைப் பகிரங்கப்படுத்துவேன்

16th Sep 2020 01:40 AM

ADVERTISEMENT

 

ஹாசன்: அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்களை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்று மஜதவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எச்.டி.ரேவண்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள், ஆட்சியாளா்களின் அழுத்ததால், சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பான ஆவணங்கள் என்னிடத்தில் உள்ளன. இதனை விரைவில் பகிரங்கப்படுத்துவேன். ஹாசன் மாவட்டத்தில் சில துறைகளில் உள்ள அதிகாரிகள் 10 முதல் 12 சதவீதம் வரை லஞ்சம் பெறுவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது. நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. எனது பெயரில் யாரேனும் பணம் பெற்றால் அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்.

இலங்கைக்கு மஜத சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைவா்கள் சென்றது தொடா்பான எனக்கு எதுவும் தெரியாது. நான் ஹாசன், ஹொளேநரசிப்பூா், பெங்களூருக்கு மட்டுமே அதிக அளவில் செல்வேன். மற்ற இடங்களுக்கு செல்ல எனக்கு நேரமில்லை. ஆா்வமும் இல்லை என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT