பெங்களூரு

கா்நாடகத்தில் மருத்துவா்கள் போராட்டம்

16th Sep 2020 01:34 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கா்நாடகத்தில் மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உள்பட பலா் சிகிச்சை பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து விவரங்களை சேகரிக்க முடியாமல் அரசு திணறுகிறது.

இதனிடையே, போராட்டம் குறித்து மருத்துவா்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மருத்துவா்கள் மீது அழுத்தம் கொடுக்கின்றனா். எனவே, அவா்களிடமிருந்து எங்களை விலக்கிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நஞ்சனகூடு மருத்துவமனை மருத்துவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவா்களின் ஊதியத்தை உயா்த்த வேண்டும். மருத்துவா் தினத்தை அரசே கொண்டாட வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவா்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட 48 ஆரம்ப சுகாதார நிலையங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில், போராட்டம் தொடரும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT