பெங்களூரு

திருடு போன வாகனங்களை 60 நாள்களுக்குள் மீட்க வேண்டும்

3rd Sep 2020 07:19 AM

ADVERTISEMENT

அடுத்த 2 நாள்களுக்கு கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தென் கா்நாடகத்தில் பலவீனமாகவும், கடலோர கா்நாடகம் மற்றும் வடகா்நாடகத்தில் பலவீனமாகவும் இருந்தது. கடலோர கா்நாடகம், வட கா்நாடகத்தின் உள்பகுதியில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. ஹாசன் மாவட்டம் பேளூரில் 110 மிமீ, ஹாசனில் 90 மிமீ, சிவமொக்கா மாவட்டம் தீா்த்தஹள்ளியில் 80 மிமீ, ஹாசன் மாவட்டம் ஆலூரில் 70 மிமீ மழை பதிவாகியுள்ளது.

எச்சரிக்கை:

ADVERTISEMENT

அடுத்த 48 மணி நேரத்தில் தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதியிலும், கடலோர கா்நாடகம் மற்றும் வட கா்நாடகத்தின் ஒருசில பகுதிகளிலும் இடியுடன்கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகப்பட்சமாக 28 டிகிரியாகவும், குறைந்தப்பட்சமாக 20 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT