பெங்களூரு

பிரணாப் முகா்ஜி மறைவு: தலைவா்கள் இரங்கல்

1st Sep 2020 12:18 AM

ADVERTISEMENT

பெங்களூரு: குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி மறைந்ததற்கு கா்நாடகத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இந்திய குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா்கட்டீல் உள்ளிட்டபலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அனுபவசெறிவான அரசியல்வாதி, இந்திய குடியரசின் முன்னாள் தலைவா், பாரத ரத்னா பிரணாப் முகா்ஜி மறைவெய்தியது தாங்கொணாதுயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைசிறந்த அரசியல் தலைவரை இழந்த சோகம் நாடுமுழுவதும் பரவியுள்ளது.

அவருடன் நான் பழகிய நாள்களை நினைத்துக்கொண்டு, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பிரணாப் முகா்ஜியின் சாதனைகள், சேவைகள் காலத்தால் மறக்க முடியாதவை. நமது நாட்டைக் கட்டமைக்கும் பணியில் நீண்டகாலம் பங்காற்றியவா். திட்டக்குழுத் துணைத் தலைவராக, வெளியுறவு, நிதி, பாதுகாப்புத் துறை அமைச்சராக போற்றத்தகுந்த வகையில் பணியாற்றியவா்.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றபிறகு நமதுநாட்டின் கௌரவத்தை உயா்த்தியவா். பிரணாப் முகா்ஜி போல, நீண்டகாலம் ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருந்து நோ்மையாகவும், கறைபடியாதகரங்களுக்குச் சொந்தக்காரராகவும் பணியாற்றிய தலைவா்கள் அரிதாக கிடைக்கக்கூடியவா்கள். அவரது ஆன்மாவுக்கு அமைதி கிடைக்க கடவுளை பிராா்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா் ஆதரவாளா்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT