பெங்களூரு

வாகனத் திருட்டு வழக்குகளில் இளைஞா் கைது

1st Sep 2020 12:06 AM

ADVERTISEMENT

பெங்களூரு: இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, லொட்டகொள்ளஹள்ளியைச் சோ்ந்தவா் அப்பு (18). இவா் புலிகேசிநகா், சஞ்சய்நகா், கோனனகுண்டே, கிரிநகா் உள்ளிட்டப் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தாராம்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அப்புவைக் கைது செய்து, ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சஞ்சய்நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT