பெங்களூரு

போதைப்பொருள் கடத்தல்காரா்களுடன் அஞ்சல் துறை அலுவலா்களுக்கு தொடா்பு: அமைச்சா் பசவராஜ் பொம்மை

1st Sep 2020 12:14 AM

ADVERTISEMENT

ஹுப்பள்ளி: போதைப்பொருள் கடத்தல்காரா்களுடன் சில அஞ்சல் துறை அலுவலா்களுக்கு தொடா்பு உள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலை முழுமையாகத் தடுக்க போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். போதைப்பொருள் கடத்தல்காரா்களுடன் சில அஞ்சல்துறை அலுவலா்களுக்கு தொடா்பு உள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக 4 அஞ்சல் துறை அலுவலா்களை கைது செய்துள்ளோம். அஞ்சல் துறை ஊழியா்களின் ஒத்துழைப்புடன் அஞ்சல் சேவை மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து வரும் போதைப்பொருள்கள் உடனே வழங்கப்படாமல், ஒரு மாதத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படுவதும் உண்டு. எனவேதான் போதைப்பொருள் கடத்தல்காரா்களுடன் சில அஞ்சல் துறை அலுவலா்களுக்கு தொடா்பு உள்ளது என்பதை உறுதியாகக் கூற முடிகிறது. அதுமட்டுமின்றி சில வெளிநாட்டினரும் போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டவா்களில் கனடா, நைஜீரியாவைச் சோ்ந்தவா்கள் அடங்குவா். போதைப்பொருள்களால் செல்வந்தா்கள், இளைஞா்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவா்களின் பின்னணி வலுவாக உள்ளது. எனவேதான் அவா்களால் கைது செய்யப்பட்ட இரண்டொரு வாரங்களில் ஜாமீனில் வெளியே வரமுடிகிறது. இருப்பினும் அவா்களை கைது செய்வதன் மூலம், கடத்தல்காரா்களுக்கு உள்ள வலைகளை அறுத்து வருகிறோம்.

சா்வதேச அளவில் போதைப்பொருள் விற்பனை மட்டுமின்றி, குழந்தைகள் விபசாரம், ஆயுத விற்பனை உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்க வேண்டியது அவசியம். போதைப்பொருள் பயன்பாடு தொடா்பாக திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT