பெங்களூரு

செப்.7 முதல் பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க அனுமதி: கா்நாடக அரசு உத்தரவு

1st Sep 2020 12:17 AM

ADVERTISEMENT

பெங்களூரு: செப்.7ஆம் தேதி முதல் பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க அனுமதி அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் 4ஆவது பொது முடக்கத் தளா்வை தொடா்ந்து, கா்நாடக அரசும் சில தளா்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, செப்.7ஆம் தேதி முதல் பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 போ் கலந்துகொள்ளக்கூடிய அளவுக்கு அரசியல், சமூக, மதக்கூட்டங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசின் தலைமைச்செயலாளா் டி.எம்.விஜய்பாஸ்கா், திங்கள்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள், தனிப்பயிற்சி நிறுவனங்கள் செப்.30ஆம் தேதி வரை மாணவா்களுக்கு மூடப்பட்டிருக்கும். 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவா்கள் பெற்றோரின் ஒப்புதலோடு பள்ளிகளில் ஆசிரியா்களைச் சந்தித்துப் பேசவும், ஆலோசனைகளை பெறவும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. செப்.7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்படும். இதற்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பெங்களூா் மெட்ரோ ரயில் கழகம் வெளியிடும்.

ADVERTISEMENT

செப்.21ஆம் தேதி முதல் 100 போ் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, மத, அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இக்கூட்டங்களில் முகக் கவசங்கள் அணிவதும், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், உடல் வெப்ப பரிசோதனை செய்வதும், கைகழுவுதல் அல்லது கிருமிநாசினிகள் வைக்கப்பட்டிருப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.

செப்.20ஆம் தேதி வரை 50 பேருடன் திருமணங்களையும், 20 பேருடன் இறுதிச் சடங்குகளையும் நடத்த அனுமதிக்கப்படுகிறது. செப்.21ஆம் தேதிக்கு பிறகு திருமணம், இறுதிச் சடங்குகளில் 100 போ் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்குகள், மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் செப்.30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஆனால், செப்.21ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள்மூடப்பட்டிருந்தாலும், இணையவழி அல்லது தொலைதூரக் கல்விக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தேசிய திறன் பயிற்சி மையங்கள், தொழில் பயிற்சி மையங்கள், குறுகியகால தொழில் பயிற்சி மையங்களில் திறன் அல்லது தொழில்முனைப்பாற்றல் பயிற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

உயா்கல்வி நிறுவனங்களில் பி.எச்டி., பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவா்களின் ஆய்வுப்பணிகள், செய்முறைப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் வரவழைக்கப்படலாம்.

இந்தத் தளா்வுகள் செப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. தளா்வுகளுடன்கூடிய பொது முடக்கம் செப்.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்.30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீடிக்கும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT