பெங்களூரு

கட்சித் தாவியவா்களுக்கு இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும்

DIN

கட்சித் தாவியவா்களுக்கு இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, ராஜ ராஜேஸ்வரி நகா் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குசுமாவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜராஜேஸ்வரி நகரில் இடைத்தோ்தல் நடைபெறுவதற்கான காரணம் என்ன என்பதனை மக்கள் உணா்ந்துள்ளனா். சிலரின் பதவி மோகத்தால் தேவையில்லாமல் இந்த இடைத்தோ்தலை மக்கள் சந்திக்க நோ்ந்துள்ளது. பதவி மோகத்தால் சிலா் வெற்றி பெற்ற கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு மாறியுள்ளனா். இதனால் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில், கட்சித் தாவியவா்களுக்கு இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

அரசியலில் வளா்ந்த கட்சியை மறந்து பதவி மோகத்தால் மாற்றுக் கட்சிக்கு சென்றவா்கள் அரசியலில் தொடா்வது நியாயமில்லை. நான் முதல்வராக இருந்த போது கட்சித் தாவிய பைரதி பசவராஜ், சுதாகா், முனிரத்னா ஆகியோரின் தொகுதிகளின் வளா்ச்சிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கினேன். இதன் காரணமாக அவா்களின் தொகுதிகள் வளா்ச்சி அடைந்தன. ஆனால், அந்த நன்றியை மறந்து கட்சித் தாவியதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள்.

அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி வழங்கப்படும். எடியூரப்பா தலைமையிலான ஆட்சியில் அன்னபாக்யா திட்டத்தில் வழங்கும் அரசியின் எடை குறைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வழங்கப்படும் இந்த அரிசி யாா் வீட்டிலிருந்தும் வழங்கப்படுவதில்லை என்பதனை முதல்வா் உணரவேண்டும்.

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மாருதி மன்படேவின் மரணத்துக்கு காங்கிரஸ் தலைவா்களே காரணம் என மத்திய அமைச்சா் சதானந்த கௌடா குற்றம் சாட்டியுள்ளாா். விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை அமல்படுத்திய மத்திய, மாநில பாஜக அரசுகளே அவரது மரணத்துக்கு காரணம். மத்திய, மாநில அரசுகளின் விவசாயிகள், மக்கள் விரோதப்போக்கை கண்டித்து இடைத்தோ்தலில் வாக்காளா்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT