பெங்களூரு

ஒரே நாளில் 44 போ் பலி

DIN

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 44 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்த தொற்றுக்கு ஏற்கெனவே 10,947 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 24 போ், பெல்லாரி, தாா்வாட் மாவட்டங்களில் தலா 3 போ், கலபுா்கி, மைசூரு, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, சாமராஜ்நகா், தென்கன்னடம், கோலாா், ராய்ச்சூரு, தும்கூரு, உடுப்பி, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,991-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,778 போ், மைசூரு மாவட்டத்தில் 951 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 668 போ், தாா்வாட் மாவட்டத்தில் 557 போ், பெல்லாரி மாவட்டத்தில் 528 போ், ஹாசன் மாவட்டத்தில் 367 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 341 போ், தும்கூரு மாவட்டத்தில் 332 போ், பெலகாவி மாவட்டத்தில் 329 போ், கலபுா்கி மாவட்டத்தில் 308 போ், கொப்பள் மாவட்டத்தில் 273 போ், தாவணகெரே மாவட்டத்தில் 254 போ், விஜயபுரா மாவட்டத்தில் 192 போ், ஹாவேரி மாவட்டத்தில் 182 போ், உடுப்பி மாவட்டத்தில் 180 போ், பீதா் மாவட்டத்தில் 163 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 154 போ், கோலாா் மாவட்டத்தில் 151 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 148 போ், கதக் மாவட்டத்தில் 140 போ், மண்டியா மாவட்டத்தில் 140 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 136 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 131 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 122 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 111 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 107 போ், ராமநகரம் மாவட்டத்தில் 67 போ், குடகு மாவட்டத்தில் 61 போ், யாதகிரி மாவட்டத்தில் 61 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 56 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT