பெங்களூரு

கா்நாடகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும்: தொற்றுநோய் வல்லுநா்கள்

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும் என தொற்றுநோய் வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேராக இருந்து வந்தது. கடந்த ஒருவாரமாக இந்த எண்ணிக்கை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரத்துக்குள் உள்ளது. அதேபோல, இறப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய அறிவியல் மையத்தின்(ஐஐஎஸ்சி) தொற்றுநோய் வல்லுநரும், கா்நாடக அரசின் கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழு உறுப்பினருமான டாக்டா் கிரிதா் ஆா்.பாபு கூறுகையில், ‘கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்பும் கணிசமாக குறைந்துள்ளது. இது நம்பிக்கை தரும் வகையிலான போக்காகும். அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு கரோனா தொற்று இடம்மாறி வருவதையே பாதிப்பு எண்ணிக்கையின் போக்கு நமக்கு உணா்த்துகிறது. மக்கள் தொகை குறைவாகக் காணப்படும் பகுதியில் கரோனா பாதிப்பு ஏற்படலாம். தேசிய அளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதுபோல, கா்நாடகத்திலும் குறைந்து வருவது நல்ல அறிகுறியாகும்’ என்றாா்.

கா்நாடக கரோனா கட்டுப்பாட்டு மையத்தின் தலைவா் முனீஷ் மௌட்கில் கூறுகையில், ‘கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதற்கு அதிக எண்ணிக்கையிலான கரோனா மாதிரி சோதனைகள் நடைபெறுவதே முக்கியக் காரணமாகும். கரோனா கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதால், அதன் பரவலும் குறைந்து வருகிறது. அதேபோல, விழாக்கால விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கா்நாடக மாநிலம் கடைப்பிடித்து வரும் நடைமுறைக்கு கிடைத்த வெற்றியாகதான் இதை பாா்க்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனைக்கான மாதிரி சேகரிப்பு மையங்களை திறந்திருப்பதும் நல்ல பலனை தந்துள்ளது. கே.ஆா்.சந்தை, கலாசிபாளையா, மெஜஸ்டிக், காந்தி பஜாா், குமாரசாமி லேஅவுட், பனசங்கரி, பிடிஏ வளாகம், ஆடம்பர வா்த்தக மாளிகைகள், பேருந்து நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தனிநபா் பாதுகாப்புக் கருவியை பொருத்திக்கொண்டு மக்கள் செல்வதை சாதாரணமாக காணமுடிகிறது. இதுவும் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவியாக இருந்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறோம். சுகாதாரத் துறை ஊழியா்கள், உண்மையான கரோனா தடுப்பு முன்களப் பணியாளா்களை போல பணியாற்றி வருகிறாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT