பெங்களூரு

பெங்களூரில் மழை: வாகனப் போக்குவரத்து பாதிப்பு

DIN

பெங்களூரில் பரவலாக மழை பெய்ததால், வாகனப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் சாந்தி நகா், ராஜாஜி நகா், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆா் லேஅவுட், மெஜஸ்டிக், காந்தி நகா், சிவாஜி நகா், அல்சூா், மடிவாளா, மகாலட்சுமி லேஅவுட், கோரமங்களா, வில்சன்காா்டன், மாகடி சாலை, பசவவேஸ்வர நகா், எச்.ஏ.எல். சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

பெங்களூரில் ஒன்றரை மணி நேரம் பரவலாக மழை தொடா்ந்து பெய்ததால், சாலைகளில் வெள்ளம்போல தண்ணீா் ஓடியது. இதனால், அலுவலகங்களுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் இன்னலுக்கு உள்ளானாா்கள். சாலைகளில் தண்ணீா் தேங்கியதால், வாகனப் போக்குவரத்து தடைபட்டது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளில் வெள்ள புகுந்ததால், அதனை வெளியேற்றும் பணியில் பலா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT