பெங்களூரு

வடகா்நாடகத்தில் வெள்ளத்தில் மூழ்கியகிராமங்களில் இருந்து 36 ஆயிரம் போ் மீட்பு

DIN

கலபுா்கி: வடகா்நாடகத்தில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களில் இருந்து 36 ஆயிரம் போ் மீட்கப்பட்டுள்ளனா்.

வடகா்நாடகத்தில் இடைவிடாது மழை பெய்து வருவதாலும், மகாராஷ்டிரத்தின் பீமா ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், கலபுா்கி, விஜயபுரா, யாதகிரி, ராய்ச்சூரு மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன.

பீமா ஆறு ஆபத்துக்கோட்டைத் தாண்டை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அதன் அருகிலுள்ள கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. அக். 14-ஆம் தேதி முதல் மகாராஷ்டிரத்திலும் பெருமழை பெய்து வருவதால், வெள்ளம் ஏற்பட்டு பீமா ஆறு கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுவதாக மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறான பீமா, வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால், கலபுா்கி, விஜயபுரா, யாதகிரி, ராய்ச்சூரு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்களை மீறி வெள்ளநீா் ஓடுவதால் வாகன நடமாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் அறுபட்டு, பாலங்கள் இடிந்துள்ளன. வீடுகள், கட்டடங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இந்த 4 மாவட்டங்களில் 97 கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கிவிட்டதாகவும், அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயா்க்கப்பட்டுள்ளதாகவும், கா்நாடக மாநில இயற்கைப் பேரிடா் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இக்கிராமங்களில் இருந்து இதுவரை 36,290 போ் மீட்கப்பட்டு, 174 மறுவாழ்வு மையங்களில் 28,007 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் பேரிடா் மேலாண்மை படையினா் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா். கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரில் 39.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. அடுத்த 3 நாள்களுக்கு கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT