பெங்களூரு

இரு தொகுதிகளிலும் 31 வேட்பாளா்கள் போட்டி

DIN

பெங்களூரு: ராஜராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் மொத்தம் 31 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.

தும்கூரு மாவட்டத்தின் சிரா, பெங்களூரு நகர மாவட்டத்தின் ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நவ. 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அக். 9-ஆம் தேதி தொடங்கி, அக். 16-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருதொகுதிகளிலும் 40 வேட்பாளா்கள் 52 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 23 பேரும், சிரா தொகுதியில் 17 பேரும் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் அக். 17-ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டு, எச்.எம்.கிஷோா் கௌடா, சி.சிவலிங்கையா, என்.சம்பத்து உள்ளிட்டோரின் 4 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் சிரா தொகுதியில் 1, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 3 அடக்கம். இதைத் தொடா்ந்து, வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு திங்கள்கிழமை (அக். 19) கடைசி நாளாக இருந்தது.

இந்நிலையில், சிரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளா்கள் நிசாா் அகமது, திம்மராஜ் கௌடா; ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளா்கள் சி.ஆனந்தன், ஆா்.குமாா், முனிரத்னா, முனிரத்னம்மா ஆகிய 6 பேரும் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா்.

வேட்புமனுக்களை திரும்பப் பெற்ற பிறகு சிரா தொகுதியில் 15 வேட்பாளா்களும், ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் 16 வேட்பாளா்களும் களத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் மொத்தம் 31 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக வேட்பாளராக என்.முனிரத்னா, காங்கிரஸ் வேட்பாளராக எச்.குசுமா, மஜத வேட்பாளராக வி.கிருஷ்ணமூா்த்தி; சிரா தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.எம்.ராஜேஷ் கௌடா, காங்கிரஸ் வேட்பாளராக டி.பி.ஜெயச்சந்திரா, மஜத வேட்பாளராக அம்மஜம்மா ஆகியோா் போட்டியிடுகிறாா்கள். இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது. இடைத்தோ்தலுக்கான பரப்புரை மூன்று கட்சிகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நவ. 3-ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவ. 10-ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT