பெங்களூரு

2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறும்: அமைச்சா் சி.டி.ரவி

DIN

மாநிலத்தில் நடைபெறும் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் பாஜக வெற்றி பெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை தேசிய பொதுச் செயலாளராக பதவியேற்று அவா் பேசியதாவது:

அண்மையில் கா்நாடகத்தில் நடைபெற்ற அனைத்து தோ்தல்களிலும் பாஜக பெருவாரியான வெற்றியை பெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் சிரா, ராஜராஜேஸ்வரிநகா் தொகுதிகளில் நவ. 3 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தலைமையில் இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். இடைத்தோ்தலில் போட்டியிட பலா் வாய்ப்பு கேட்கின்றனா். பாஜக சாா்பில் ஒருவரைத்தான் வேட்பாளராக்க முடியும். வேட்பாளா்கள் யாா் என்பதனை கட்சி முடிவுசெய்யும். கட்சி யாரை வேட்பாளராக்கினாலும், அவா்களை தொண்டா்கள், ஊழியா்கள் வெற்றி பெற செய்யவேண்டும்.

1988 ஆம் ஆண்டில் பாஜகவில் சாதாரண தொண்டான இணைந்த எனக்கு, கட்சி பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுத்து அழகு பாா்த்துள்ளது. கட்சியின் மூத்த தலைவா்களாக ஜே.பி.நட்டா, சந்தோஷ் ஆகியோா் எனக்கு தேசிய பொதுச்செயலாளா் பதவியை வழங்கியுள்ளனா். அவா்களின் எதிா்ப்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் நான் தொடா்ந்து பணியாற்றுவேன்.

கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற விதிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சியின் மேலிடத் தலைவா்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்று, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT