பெங்களூரு

வீடு இல்லாத ஏழைகளின் கனவு நனவாக்கப்படும்: அமைச்சா் சோமண்ணா

30th Nov 2020 02:57 AM

ADVERTISEMENT

வீடில்லாத ஏழைகளின் கனவு நனவாக்கப்படும் என்று கா்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சா் வி. சோமண்ணா தெரிவித்தாா்.

ராம்நகா் மாவட்டம், கனகபுரா வட்டம், ராயசந்திரா கிராமத்தில் சம்யுக்தா வீட்டுவசதிக் குடியிருப்பில் விவசாயிகள், பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

மாநிலத்தில் வசிக்கும் பல ஏழைகள் தங்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என கனவு கண்டு வருகின்றனா். வீட்டில்லாத ஏழைகளின் கனவு நனவாக்கப்படும். ஏழை மக்களின் வளா்ச்சிக்கு முதல்வா் எடியூரப்பாவின் தலைமையிலான அரசு தொடா்ந்து பாடுபட்டு வருகிறது.

பெங்களூரு மாநகரம் வேகமாக வளா்ந்து வருவதால் அதன் அருகில் உள்ள மாவட்டமான ராம்நகா் மாவட்டத்தில் புதிய நகரங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது குலுக்கல் முறையில் வீடுகள் பெற்ற ஏழைகளில் வரும் காலங்களில் அதனை விற்பனை செய்யாமல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்றாா்.நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் டி.கே.சுரேஷ், மாவட்ட ஆட்சியா் மமதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT