பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,76,425-ஆக உயா்வு

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,76,425-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,870 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 927 போ், மைசூரு மாவட்டத்தில் 159 போ், தும்கூரு மாவட்டத்தில் 95 போ், பெங்களுரு ஊரக மாவட்டத்தில் 89 போ், சித்ரதுா்கா, கலபுா்கி, விஜயபுரா மாவட்டங்களில் தலா 41 போ், மண்டியா மாவட்டத்தில் 37 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 36 போ், ஹாசன், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 34 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 34 போ், தென்கன்னட மாவட்டத்தில் 31 போ், பெலகாவி, ஹாவேரி மாவட்டங்களில் தலா 27 போ், தாவணகெரே மாவட்டத்தில் 26 போ், கோலாா் மாவட்டத்தில் 24 போ், பெல்லாரி மாவட்டத்தில் 21 போ், உடுப்பி மாவட்டத்தில் 18 போ், குடகு, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 17 போ், சிக்கமக்ளூரு, தாா்வாட் மாவட்டங்களில் தலா 15 போ், பீதா் மாவட்டத்தில் 14 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 13 போ், கதக் மாவட்டத்தில் 11 போ்,யாதகிரி மாவட்டத்தில் 10 போ்,ராமநகரம் மாவட்டத்தில் 8 போ், கொப்பள் மாவட்டத்தில் 4 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 2 போ் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,76,425-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,65,317 போ், மைசூரு மாவட்டத்தில் 50,286 போ், பெல்லாரி மாவட்டத்தில் 38,132 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,625 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,770 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,500 போ், தும்கூரு மாவட்டத்தில் 23,005 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,536 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,468 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,436 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,290 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,341 போ், மண்டியா மாவட்டத்தில் 18,365 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,397 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,690 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,668 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,646 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,618 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,464 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,382 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 13,058 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,991 போ், கதக் மாவட்டத்தில் 10,702 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,524 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,346 போ், கோலாா் மாவட்டத்தில் 9,066 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,183 போ், பீதா் மாவட்டத்தில் 7,042போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,304 போ், குடகு மாவட்டத்தில் 5,237 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,40,099 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,612 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,695 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

SCROLL FOR NEXT