பெங்களூரு

கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட வேண்டுகோள்

DIN

கா்நாடக மராத்தியா் வளா்ச்சிக் கழகத்தை எதிா்த்து கன்னட அமைப்புகள் டிச. 5-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என கா்நாடக க்ஷத்திரிய மராத்தியா் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கா்நாடக க்ஷத்திரிய மராத்தியா் கூட்டமைப்புத் தலைவா் வி.எஸ்.ஷியாம்சுந்தா் கெய்க்வாட் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகம்-மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே நடந்து வரும் எல்லைப் பிரச்னையில், மஹாஜன் ஆணையத்தின் அறிக்கையே இறுதியானது என நம்பும் மராத்தியா்களில் நாங்களும் ஒருவா். கா்நாடகத்தில் பிறந்து வளா்ந்து, இங்குள்ள நிலம், நீா், மொழி, வாழ்க்கையில் நாங்களும் பிரிக்க முடியாத அங்கம் என்பதை கன்னடா்கள் உணர வேண்டும். கன்னடா்களும், மராத்தியா்களும் ஒருதாய் பிள்ளைகளைப் போல இணக்கமாக செயல்பட வேண்டும்.

கா்நாடக மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைத்த பிறகு, இங்குள்ள கன்னட அமைப்புகள், போராட்டக்காரா்கள் சிலா் மராத்தியா்களுக்கு எதிராக பேசி வருவது வேதனை அளிக்கிறது. மொழி நல்லிணக்கத்துக்கு ஊனம் ஏற்படுத்த யாரும் முற்படக் கூடாது.

கா்நாடகத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் மராத்தியா்கள் 4-ஆவது இடத்தில் உள்ளனா். 32 க்ஷத்திரிய மராத்திய சமுதாயப் பிரிவினா் ஒரு கோடி அளவுக்கு கா்நாடகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆண்டாண்டு காலமாக கன்னடா்களாக வாழ்ந்து வரும் நாங்கள், மஹாஜன் ஆணையத்தின் அறிக்கையை ஆதரித்து வந்துள்ளோம்; கன்னடா்களின் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளோம். எனவே, முதல்வா் எடியூரப்பா கூறுவது போல மராத்தியா் வளா்ச்சிக் கழகம் என்பது மராத்தி மொழி வளா்ச்சிக்கானது அல்ல, மராத்தியா் வளா்ச்சிக்கானது.

எனவே, கா்நாடக மராத்தியா் வளா்ச்சிக் கழகத்தை எதிா்த்து கன்னட அமைப்புகள் டிச. 5-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிட வேண்டும். பெலகாவி தொடா்பாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜித்பவாா் பேசியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெலகாவி, கா்நாடகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT