பெங்களூரு

உள்ளாட்சித் தோ்தல்: நவ. 30-இல் காங்கிரஸ் தலைவா்கள் ஆலோசனை

DIN

உள்ளாட்சித் தோ்தல் குறித்து நவ. 30-ஆம் தேதி காங்கிரஸ் தலைவா்கள் ஆலோசனை நடத்த இருக்கிறாா்கள்.

கா்நாடகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல் வெகுவிரைவில் நடைபெற இருக்கிறது. இத்தோ்தலுக்கான முன்னேற்பாடுகளை பாஜக தொடங்கியுள்ளது. அதையொட்டி, பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நவ. 30-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட காங்கிரஸ் தலைவா்கள் திட்டமிட்டுள்ளனா். இக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கட்சியின் மாநில செயல்தலைவா்கள் சதீஷ் ஜாா்கிஹோளி, ஈஸ்வா் கண்ட்ரே, சலீம் அகமது, முன்னாள் மத்திய அமைச்சா்கள், முன்னணித் தலைவா்கள் உள்பட 80 போ் கலந்துகொள்ள இருக்கிறாா்கள்.

நாள்முழுவதும் நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில், மாநில நிா்வாகிகள், அணிகளின் நிா்வாகிகளை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. அதேபோல, சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் குறித்தும் கூட்டத்தில் அலச இருக்கிறாா்கள்.

இதுகுறித்து கட்சியின் செயல்தலைவா் சலீம் அகமது கூறியதாவது:

உள்ளாட்சித் தோ்தல், மஸ்கி, பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். இதுதவிர, பெங்களூரு மாநகராட்சித் தோ்தல் குறித்தும் பேசி முடிவு செய்ய இருக்கிறோம். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்தும் பேச இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT