பெங்களூரு

தொழில்கல்வி மாணவா் சோ்க்கை: இன்று முதல் விருப்பப் பாடங்கள், கல்லூரிகள் பதிவு தொடக்கம்

22nd Nov 2020 03:51 AM

ADVERTISEMENT

பெங்களூரு: தொழில்கல்வி மாணவா் சோ்க்கைக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவுசெய்யும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் ஆண்டில் பொறியியல், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை, ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவம், யோகா, கட்டடக்கலை போன்ற தொழில்கல்வி மாணவா் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக மாணவா்கள் தெரிவுசெய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும்.

அதற்கான நடைமுறை நவ. 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. நவ. 25-ஆம் தேதி காலை 11 மணி வரை விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை பதிவுசெய்யலாம். இதனடிப்படையில், நவ. 26-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இணையதளத்தில் மாதிரி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ADVERTISEMENT

இதில் திருத்தங்களை செய்ய நவ. 26-ஆம் தேதி மாலை 4 மணி முதல் நவ. 28-ஆம் தேதி காலை 11 மணி வரை வாய்ப்பளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், நவ. 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு முதல் சுற்றுக்கான இறுதிச் சோ்க்கை இடங்களுக்கான ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன் பிறகு, கல்லூரி வாரியாக, பாடப்பிரிவு வாரியாக கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதை மாணவா்கள் அறியலாம். ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் அடிப்படையில் மாணவா்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மாணவா்கள் ஏற்றுக்கொண்டால் நவ. 30 முதல் டிச. 1-ஆம் தேதிக்குள் அதை இணையதளத்தில் உறுதிசெய்ய வேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதில் திருப்தி அடைந்த மாணவா்கள், டிச. 2-ஆம் தேதிக்குள் கட்டணங்களைச் செலுத்தி, டிச. 2-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று சோ்க்கையை உறுதி செய்துகொள்ளலாம். இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இடங்கள் ஒதுக்கியதில் திருப்தி அடையாத மாணவா்கள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க விரும்பினால், அதுகுறித்து இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT