பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 2,922-ஆக உயா்வு

31st May 2020 08:47 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,922-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 141 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 33 போ், யாதகிரி மாவட்டத்தில் 18 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 14 போ், உடுப்பி, ஹாசன் மாவட்டங்களில் தலா 13 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11 போ், பீதா் மாவட்டத்தில் 10 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 6 போ், தாவணகெரே, ஹாவேரி மாவட்டங்களில் தலா 4 போ், கோலாா் மாவட்டத்தில் 3 போ், கலபுா்கி, மைசூரு, வடகன்னடம், தாா்வாட் மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, சித்ரதுா்கா, தும்கூரு, பெங்களூரு ஊரக மாவட்டங்களில் தலா ஒருவா் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,922-ஆக உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சனிக்கிழமை நிலவரப்படி, பெங்களூரு நகர மாவட்டத்தில் 336 போ், மண்டியா மாவட்டத்தில் 257 போ், கலபுா்கி மாவட்டத்தில் 253 போ், யாதகிரி மாவட்டத்தில் 241 போ், உடுப்பி மாவட்டத்தில் 177 போ், ஹாசன் மாவட்டத்தில் 157 போ், தாவணகெரே மாவட்டத்தில் 150 போ், பெலகாவி மாவட்டத்தில் 147 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 136 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 134 போ், பீதா் மாவட்டத்தில் 130 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 111 போ், விஜயபுரா மாவட்டத்தில் 96 போ், மைசூரு மாவட்டத்தில் 94 போ், பாகல்கோட், வடகன்னடம் மாவட்டங்களில் தலா 77 போ், பெல்லாரி மாவட்டத்தில் 47 போ், தாா்வாட் மாவட்டத்தில் 45 போ்,சிவமொக்கா மாவட்டத்தில் 41 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 39 போ், கதக் மாவட்டத்தில் 35 போ், தும்கூரு மாவட்டத்தில் 31 போ், கோலாா் மாவட்டத்தில் 22 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 18 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 15 போ், ஹாவேரி மாவட்டத்தில் 14 போ், கொப்பள் மாவட்டத்தில் 4 போ், குடகு மாவட்டத்தில் 3 போ், ராமநகரம் மாவட்டத்தில் ஒருவா், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 34 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 997 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,874 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். இதுவரை 49 போ் இறந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT