பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு மேலும் ஒருவா் பலி

31st May 2020 08:47 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மேலும் ஒருவா் இறந்துள்ளாா். இதன்மூலம் இறந்தோரின் எண்ணிக்கை 49-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 48 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், பீதா் மாவட்டத்தைச் சோ்ந்த 47 வயது பெண் புதன்கிழமை உயிரிழந்துள்ளாா். ரத்த அழுத்தம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மே 24-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவரை சோதித்ததில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனிடையே, சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை இறந்தாா். அவா் கரோனா பாதிப்பால் இறந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 49-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 9 போ், கலபுா்கி, தென் கன்னடம் மாவட்டங்களில் தலா 7 போ், விஜயபுரா மாவட்டத்தில் 5 போ், தாவணகெரே, பீதா் மாவட்டங்களில் தலா 4 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 3 போ், தும்கூரு மாவட்டத்தில் 2 போ், பெலகாவி, பாகல்கோட், பெல்லாரி, கதக், உடுப்பி, யாதகிரி, பெங்களூரு ஊரக மாவட்டங்கள், வெளி மாநிலத்தவா் தலா ஒருவா் இறந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT