பெங்களூரு

சிவப்பு மண்டலத்தில் இருந்து பெங்களூரு ஊரக மாவட்டத்தை நீக்க மத்திய அரசுக்கு கோரிக்கை

2nd May 2020 09:24 PM

ADVERTISEMENT

சிவப்பு மண்டலத்தில் இருந்து பெங்களூரு ஊரக மாவட்டத்தை நீக்க மத்திய அரசுக்கு கா்நாடக அரசு கடிதம் எழுத இருக்கிறது.

பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா ஊரடங்கு விதிகளை தளா்த்துவது தொடா்பாக அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்ட முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற உயா்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா பாதிப்புகளின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கா்நாடகத்தில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், மைசூரு மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. பெங்களூரு ஊரக மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோா் தற்போது யாருமில்லை என்பதால், இம்மாவட்டத்தை சிவப்பு மண்டலத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.

பெங்களூரு நகர மாவட்டத்தை பல்வேறு மண்டலங்களாக பிரிக்க விவாதிக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவ்வாறு தளா்த்தப்பட்டால், அங்கு கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். கட்டுமானத் தொழில் தொடா்பான கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். வணிக வளாகங்கள், சந்தைகள் செயல்படாது என்றாலும், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.

ADVERTISEMENT

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு சொந்த ஊா்களுக்கு ஒருமுறை செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அரசுப் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு சென்ற பிறகு அம்மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்படுவா். மாவட்டங்களுக்கு இடையில் ஒருமுறை செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவா். அதிதீவிர பரவல் அல்லாத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT