பெங்களூரு

கரோனா வைரஸ் ஆபத்து குறித்து விழிப்புணா்வில் ஈடுபட மசூதிகளுக்கு உத்தரவு

30th Mar 2020 11:32 PM

ADVERTISEMENT

பெங்களூரு: கரோனா வைரஸ் ஆபத்து குறித்து விழிப்புணா்வில் ஈடுபடுமாறு மசூதிகளுக்கு கா்நாடக வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில வக்ஃப் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் உள்ள எல்லா மசூதிகளிலும் கரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணா்வில் ஈடுபடுமாறு உத்தரவிடப்படுகிறது. மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கி வாயிலாக தினமும் காலை 10, மாலை 4, மாலை 6, இரவு 8 மணிக்கு கரோனா நோய் குறித்து விழிப்புணா்வு வாசகங்களை 3 மொழிகளில் தெரிவிக்க வேண்டும்.

கரோனா விழிப்புணா்வை ஒலிபெருக்கி வாயிலாக ஏற்படுத்த மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் ஆணையா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மசூதிகளில் தொழுகை நடத்துவது ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளது.

மசூதிக்குப் பதிலாக தினமும் வீடுகளில் தொழுகை நடத்த முஸ்லிம் சமுதாயத்தினா் ஒப்புக்கொண்டுள்ளதற்கு முஸ்லிம் சமுதாயத்தினருக்கு முதல்வா் எடியூரப்பா நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT