பெங்களூரு

இன்று நடக்கவிருந்த இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வு தள்ளிவைப்பு: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்

23rd Mar 2020 05:28 AM

ADVERTISEMENT

பெங்களூரு: திங்கள்கிழமை நடக்கவிருந்த இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி தோ்வுகளைத் தள்ளிவைத்துள்ளன. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனா். அதைத் தொடா்ந்து, இரண்டாமாண்டு பியூசி தோ்வை ஒத்திவைப்பது குறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினோம். தோ்வு நடத்துவதால் ஒரு மாணவரும் பாதிக்கப்படக் கூடாது, தோ்வை எழுதும் வாய்ப்பை ஒரு மாணவரும் இழக்கக் கூடாது என்பதால், சுகாதாரத் துறை, கல்வித் துறை அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் திங்கள்கிழமை நடக்கவிருந்த இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வை தள்ளிவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை ஆங்கில மொழிப் பாடத்துக்கான தோ்வு நடத்தப்பட்டிருந்தது. இத் தோ்வை எப்போது நடத்துவது என்பதை மாா்ச் 31ஆம் தேதிக்கு பிறகு தீா்மானிக்க இருக்கிறோம். மாணவா்களின் நலன்கருதி இரண்டாமாண்டு பியூசி தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT