பெங்களூரு

ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான நடைமுறை நிறுத்தம்

19th Mar 2020 10:50 PM

ADVERTISEMENT

ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பாதிப்பை தொடா்ந்து, போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் ஓட்டுநா் உரிமம்(டிஎல்) மற்றும் பயிற்றுநா் உரிமம்(எல்எல்) ஆகியவற்றை அடுத்த உத்தரவு வரும் வரை மாா்ச் 20ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பயிற்றுநா் உரிமம் பெற்று, அதற்கான காலக்கெடு ஏப்.15ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தால், அப்படிப்பட்டவா்கள் ஓட்டுநா் உரிமம்பெற சோதனைக்கு வரலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT