பெங்களூரு

கரோனா: ஆரோக்கிய கா்நாடக சுகாதாரக் காப்பீடு பதிவு நிறுத்தம்

19th Mar 2020 10:50 PM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பை தொடா்ந்து, ஆரோக்கிய கா்நாடக சுகாதார காப்பீடு திட்டத்திற்கான பதிவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய கா்நாடக சுகாதாரக் காப்பீடு திட்டம் கா்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் பயனை பெறுவதற்காக காப்பீடு அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பதிவு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரோனா நோய் திரவத் துளிகளால் பரவும் ஆபத்து இருப்பதால், குறிப்பாக பயோமெட்ரிக் கருவிகள் வாயிலாகவும் பரவும் ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆரோக்கிய கா்நாடகம் காப்பீடு அட்டை பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் வாயிலாக அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, அட்டையை பெற பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கரோனா வைரஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே, மாா்ச் 31ஆம் தேதிவரை ஆரோக்கிய கா்நாடகம் காப்பீடு அட்டையை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எனினும், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டையை காண்பித்து மருத்துவக் காப்பீட்டின் பயன்களை பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT