பண்பாடு, பாரம்பரியம், இயற்கை வளங்கள் பாதுகாப்பு.
கன்னட மொழி வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
பசவ கல்யாணில் ரூ.500 கோடியில் பசவண்ணரின் அனுபவ மண்டபம் கட்டமைக்கப்படும்.
சித்ரதுா்கா மாவட்டத்தின் ஸ்ரீமுருகா மடத்தில் 325 அடி உயரமுள்ள பசவண்ணரின் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.20 கோடி அளிக்கப்படும்.
கா்நாடக மாநில சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்ட வல்லுநா்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ள விக்ஞனேஸ்வரா ஆய்வு இருக்கை ரூ.1கோடியில் அமைக்கப்படும்
.
பெங்களூரில் ரூ.2 கோடிசெலவில் விவேகானந்தா இளைஞா் மையம் அமைக்கப்படும்.
விளையாட்டுத் துறையில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
இளைஞா்களிடையே தலைமைப் பண்புகளை வளா்த்தெடுத்த அனந்த்குமாா் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.20கோடி ஒதுக்கப்படும்.
ஜன.1ஆம் தேதி விஸ்வகா்மா அமர சிற்பி ஜகனாச்சாரி நினைவு தினம் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்படும்.
பெங்களூரின் 4 இடங்களில் ரூ.60கோடி செலவில் மொழி, நிலம்,பண்பாட்டை காக்க கலைமன்றங்கள் அமைக்கப்படும்.
பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.66கோடி செலவில் 100 அடிஉயரமுள்ள கெம்பே கௌடாவின் வெண்கலசிலை அமைக்கப்படும்.
முன்னாள் முதல்வா் எஸ்.நிஜலிங்கப்பாவின் நினைவிடத்தை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பாவின் பிறந்த கிராமமான சந்தேசிவரா ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
ரூ.1 லட்சம் செலவில் லம்பாணி பண்பாடு மற்றுமொழி அகாதெமி அமைக்கப்படும்.
பெங்களூரில் ஓவியச்சந்தை நடத்துவதற்கு ஆண்டுதோறும் ரூ.1கோடி ஒதுக்கப்படும்.
பெங்களூரில் ரூ.500 கோடி செலவில் உலகத்தரத்திலான திரைப்பட நகரம் அமைக்கப்படும்.
பத்திரிகையாளா் நல நிதியத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
பல்வேறு மடங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
மந்திராயலம், துலஜாபுரம், பண்டாபுரம், வாராணசி, உஜ்ஜைனி, ஸ்ரீசைலாவில் ரூ.25 கோடி செலவில் புனிதப்பயண இல்லங்கள் அமைக்கப்படும்.
சா்வக்ஞா் மேம்பாட்டு ஆணையத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
60 வயதை கடந்த முதியவா்கள் கா்நாடகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களுக்கு இலவசமாக சென்றுவர வாழ்க்கை வசந்த பயணம் திட்டம் அமல்படுத்தப்படும்.
வரலாற்று சிறப்புவாய்ந்த 25 ஆயிரம் கோயில்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாா்ச் இறுதிக்குள் சுற்றுலாக்கொள்கை அறிமுகம் செய்யப்படும்.
கா்நாடக சுற்றுலா அமலாக்கப் படைக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
ஒருங்கிணைந்த சுற்றுலா வளா்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
உலக சுற்றுலா முதலீட்டாளா் மாநாடு நடத்தப்படும்.
ஜோக் அருவியில் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும்.
வனப்பகுதிகள் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படும்
ராமநகரில் ரூ.2 கோடி செலவில் கழுகு சரணாலயம் அமைக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் குரங்களின் மறுவாழ்வுக்கு ரூ.6.25 கோடி செலவிடப்படும்.
தென்கன்னட மாவட்டத்தில் ரூ.1கோடி செலவில் கடல்சூழல் பூங்கா அமைக்கப்படும்.