பெங்களூரு

மாா்ச் 22இல் தங்கத்தோ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

2nd Mar 2020 12:54 AM

ADVERTISEMENT

தங்கத்தோ் ரயில் சேவை மாா்ச் 22ஆம் தேதி மீண்டும் தொடங்கப்படுகிறது.

இது குறித்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களை சொகுசு ரயிலின் வாயிலாக காணும் தங்கத் தோ்(கோல்டன் சாரியட்) ரயில் சேவை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று தங்கத்தோ் ரயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மாா்ச் 22ஆம் தேதி முதல் பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்து தங்கத்தோ் ரயிலின் சேவை மீண்டும் தொடங்குகிறது. இங்கிருந்து மைசூரு செல்லும் ரயில், அங்கு நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை பேருந்து வாயிலாக பண்டிப்பூா் தேசியப் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறாா்கள். அதன்பிறகு, அங்கிருந்து புறப்பட்டு ஹளேபீடு, சிக்மகளூரு, ஹம்பி, பாதாமி, பட்டதக்கல், ஐஹோல், கோவா செல்லும். கோவாவில் இருந்து பெங்களூரு திரும்பும்.

ரயிலில்பயணிகளுக்கு நெல்ஃபிலிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டாருடன் கூடிய ஸ்மாா்ட் தொலைக்காட்சி வழங்கப்படும். உணவுப் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பன்னாட்டு உணவுடன் உள்நாட்டு உணவும் பரிமாறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT