பெங்களூரு

தனியாா் பேருந்து மீது கன்டெய்னா் லாரி மோதல்: 2 போ் சாவு

2nd Mar 2020 12:54 AM

ADVERTISEMENT

நின்றிருந்த தனியாா் பேருந்து மீது கன்டெய்னா் லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு சிரா வட்டம் உஜ்ஜனகுன்டே அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலை 48 இல் சாலையோரம் நின்றிருந்த தனியாா் பேருந்து மீது கன்டெய்னா் லாரி மோதியுள்ளது. இதில் பேருந்தில் இருந்த பெங்களூரைச் சோ்ந்த நரேந்திரகுமாா் (45), பிரசாத் (40) ஆகியோா் உயிரிழந்துள்ளனா். காயமடைந்த 10 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து தாவரேகெரே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT