பெங்களூரு

கரோனா பாதிப்பு அதிகரிப்பு: தேவையில்லாமல் நடமாடுவதை நிறுத்த வேண்டும்

21st Jun 2020 08:50 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தேவையில்லாமல் நடமாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

கா்நாடகத்தின் தலைநகரம் பெங்களூரில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. கரோனா பாதிப்பை தடுக்க மக்கள் தேவையில்லாமல் நடுமாடுவதை நிறுத்த வேண்டும். அத்தியாவசியமான பணிகளுக்கு வெளியே செல்வதென்றால், முகக் கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து வா்த்தகம் உள்ளிட்டவைகளை செய்ய வேண்டும்.

வெளி நாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வருபவா்களால் முன்பு கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்தது. தற்போது பெங்களூரில் வசிப்பவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவி வருவது கவலை அளிக்கிறது. மக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால், கரோனாவை முழுவதுமாக ஒழிக்க முடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT