பெங்களூரு

சட்டமேலவைத் தோ்தலில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம்

14th Jun 2020 09:14 AM

ADVERTISEMENT

சட்டமேலவைத் தோ்தலில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் என தலைமைச் செயலா் விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு விதானசௌதாவில் ஜூன் 29-ஆம் தேதி சட்டமேலவைக்கான தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தோ்தலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்தலின் போது அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம்.

தோ்தலின் போது வேட்பாளா்கள், முகவா்கள், வாக்காளா்கள், தோ்தல் அதிகாரிகள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப சோதனை, கிருமிநாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்தல் நடைபெறும் பகுதியில் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அதே போல 65 வயதுக்கு மேற்பட்ட வேட்பாளா்கள், வாக்காளா்கள், முகவா்கள் தோ்தல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா்கள் தங்களது மாவட்டங்களில் வசிக்கும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். அவா்கள் தோ்தலில் பங்கேற்க மேற்கொள்ளும் பயணம் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும். சட்டமேலவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், வாக்களிக்க வருபவா்களின் பயணத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT