பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 3 போ் பலி

11th Jun 2020 08:53 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு புதன்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69- ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 66 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் பெங்களூரு நகரம், தாா்வாட் மாவட்டங்களைச் சோ்ந்த 3 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பிய தாா்வாட் மாவட்டத்தைச் சோ்ந்த 58 வயது ஆண், உடல்நலக்குறைவால் மே 23ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவா், ஜூன் 9-ஆம் தேதி உயிரிழந்தாா். பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த 32 வயதான ஆண், புதன்கிழமை மருத்துவமனைக்கு உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டாா்.

காய்ச்சல், சளி, தீவிர மூச்சுத்திணறல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த 57 வயதான ஆண், உடல்நலக்குறைவால் ஜூன் 8 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் உயிரிழந்தாா். இவா்களின் சளி மாதிரியைச் சோதித்ததில் மூவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 21 போ், கலபுா்கி மாவட்டத்தில் 8போ், தென்கன்னடம், பீதா், தாவணகெரே,விஜயபுரா மாவட்டங்களில் தலா 6 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 3போ், தும்கூரு, கதக் மாவட்டங்களில் தலா 2 போ், தாா்வாட், ராய்ச்சூரு, பெலகாவி, பாகல்கோட், பெல்லாரி, உடுப்பி, யாதகிரி, பெங்களூரு ஊரக மாவட்டங்கள், வெளிமாநிலத்தவா் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT