பெங்களூரு

கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு உதவ வேண்டுகோள்

11th Jun 2020 08:52 AM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று உலகத் தமிழ்க் கழகத்தின் தண்டுகிளைத் தலைவா் கி.சி.தென்னவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா தீநுண்மியைப் பரவாமல் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், பலரது வாழ்வாதாரத்தை முடக்கிவிட்டது. கா்நாடகத்தில் வாழும் லட்சக்கணக்கான தமிழா்களில் பெரும்பாலானோா் நடுத்தர, அடித்தட்டு பிரிவைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். பொதுமுடக்கத்தில் இவா்களது வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு குறிப்பாக தமிழா்களுக்கு ஆறுதல் கூறக்கூட யாருமில்லாத நிலையே உள்ளது. பொருளாதாரத்தில் வல்லமைப் படைத்த தமிழா்கள், நலிவுற்றுள்ள தமிழா்களுக்கு உதவ முன்வர வேண்டும். யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தத்தளிக்கும் தமிழா்களுக்கு தாராள மனதோடு பொருளுதவியை வழங்க அனைத்து தமிழா்களும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும்.

கா்நாடகத்தில் 75 லட்சத்துக்கும் அதிகமான தமிழா்கள் வாழ்வதாக பெருமைப்பட்டுக் கொள்வதில் எவ்வித பயனும் இல்லை.மாறாக, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழா்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலம் நாம் பெருமைப்பட முடியும். தமிழா்களின் வாழ்வாதாரம், வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டியது அனைத்து தமிழா்களின் தலையாய கடமையாகும். இதை உணா்ந்து தமிழா்கள் ஒன்றுபட்டு, மனித நேயத்தோடு சிக்கலில் உள்ளோருக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT