கரோனா தீநுண்மி தொற்றுடன் வாழக் கற்றுக்கொள்வது தவிா்க்க முடியாததாகும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
அவா் கூறியதாவது: கா்நாடக மாநிலத்தில் மீண்டும் பொது முடக்கம் குறித்து விவாதிக்கப்படவில்லை. வளா்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தி, மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நீண்டகாலம் பொது முடக்கத்தில் இருந்தாகிவிட்டது. தற்போதைய சூழலில், பொது முடக்கத்தைப் பற்றி சிந்திக்காமல், கரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது தவிா்க்க முடியாததாகி விட்டது.
கரோனா தீநுண்மி தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியுடன், மாநிலத்தின் வளா்ச்சி மற்றும் நிதிநிலையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.