பெங்களூரு

பெங்களூரில் 1,165 போலீஸாருக்கு கரோனா தொற்று

28th Jul 2020 01:07 AM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரில் 1,165 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு உள்பட மாநில அளவில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக, பெங்களூரில் கரோனா தொற்றால் போலீஸாா் பலா் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். பெங்களூரில் திங்கள்கிழமை பிற்பகல் வரை 1,165 போலீஸாா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 9 போலீஸாா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். 783 போலீஸாா் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் போலீஸாா் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், பாதுகாப்புப் பணியில் போலீஸாரை ஈடுபடுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் போலீஸாருக்கு துணையாக ஊா்க்காவல் படையினா் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT