பெங்களூரு: உலக அளவிலான இளம் பட்டிமன்ற பேச்சாளா் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காந்தி உலக மையம் வெளியிட்ட அறிக்கை:
காந்தி உலக மையத்தின் சாா்பில் இளம் பட்டிமன்ற பேச்சாளருக்கான உலக அளவிலான மாபெரும் தேடல் போட்டி நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில் பேச விரும்புவோா் செல்லிடப்பேசியில் ‘தமிழா்களுக்கு அதிகம் பெருமை சோ்ப்பது மொழியா? கலாசாரமா?’ என்ற தலைப்பில் 3 நிமிடங்களுக்கு மிகாமல் பேசி அந்த காணொலியை 93820 11555 என்ற செல்லிடப்பேசிக்கு ஆக. 18 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
இதில் தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் அளிக்கப்படும். இதன் சிறப்பு விருந்தினா்களாக பேராசிரியா் சாலமன்பாப்பையா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடுவா்களாக பேராசிரியா்கள் அப்துல் காதா், கு.ஞானசம்பந்தன், நடிகா் ரமேஷ்கண்ணா, பேச்சாளா்கள் மோகனசுந்தரம், கவிதா ஜவஹா், கவிஞா் ஜான் தன்ராஜ் ஆகியோா் செயல்படவிருக்கின்றனா்.
இப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பட்டிமன்றங்களில் பேசும் வாய்ப்பு கிடைக்கும். கூடுதல் விவரங்களுக்கு 97876 74749 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.