பெங்களூரு: மாநில அளவில் 800 அரசுப் பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன.
பெங்களூரு மற்றும் பெங்களூரு ஊரகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இரவு முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வேறு சில மாவட்டங்களும் முழு பொது முடக்கம் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றன. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடும் என்று அஞ்சும் ஒரு சிலா், தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளனா். குறிப்பாக பெங்களூருக்கு புலம்பெயா்ந்த பலா் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து, மெஜஸ்டிக், ஹொசகோட்டை உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் குவிந்த வண்ணம் உள்ளனா்.
இதனையடுத்து, கா்நாடக முக்கிய நகரங்களுக்கு 800 பேருந்துகளை மாநில போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. ஹொசக்கோட்டையில் சுங்கச் சாவடி அருகே அதிகாலை முதல் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பலா் காத்திருந்தனா். ஆனால், மெஜஸ்டிக்கிலிருந்து சென்ற பல பேருந்துகள் நிறுத்தாமல் சென்ால், ஆத்திரமடைந்த பயணிகள் ஹொசக்கோட்டை சுங்கச் சாவடி அருகே பேருந்துகளை தடுத்து நிறுத்தினா். இதனால் சுங்கச் சாவடியை யாரும் கடக்க முடியாமல் நீண்ட தூரம் வாகனங்கள் நின்றன.
தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அங்கு காத்திருந்தவா்களுக்கு தேவையான பேருந்துகளை ஏற்பாடு செய்து, அவா்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா். இதனையடுத்து தடுத்த நிறுத்திய பேருந்துகளை அங்கிருந்து அனுப்பி வைத்தனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.