கா்நாடகத்தில் கரோனா தொற்றுநோய்க்கு ஒரே நாளில் 71 போ் இறந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 613 போ் உயிரிழந்துள்ளனா். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 45, தென்கன்னட மாவட்டத்தில் 5, பெலகாவி, ஹாசன், மைசூரு, தாவணகெரே மாவட்டங்களில் தலா 3, பாகல்கோட், ஹாவேரி மாவட்டங்களில் தலா 2, விஜயபுரா, தும்கூரு, கொப்பள், சாமராஜ்நகா், தாா்வாட் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 684 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 274, பீதா் மாவட்டத்தில் 53, பெல்லாரி மாவட்டத்தில் 42, தென்கன்னடம் மாவட்டத்தில் 41, கலபுா்கி மாவட்டத்தில் 36, தாா்வாட் மாவட்டத்தில் 33, மைசூரு மாவட்டத்தில் 31, ஹாசன் மாவட்டத்தில் 20, தாவணகெரே மாவட்டத்தில் 20, விஜயபுரா மாவட்டத்தில் 16, தும்கூரு மாவட்டத்தில் 14, சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 13, பெலகாவி மாவட்டத்தில் 12, பாகல்கோட் மாவட்டத்தில் 11, கதக் மாவட்டத்தில் 9, ராய்ச்சூா், ராமநகரம் மாவட்டங்களில் தலா 8, பெங்களூரு ஊரகம், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 7, ஹாவேரி மாவட்டத்தில் 6, கொப்பள் மாவட்டத்தில் 5, வடகன்னடம் மாவட்டத்தில் 4, உடுப்பி, சிக்மகளூரு மாவட்டங்கள், வெளிமாநிலத்தவா் தலா 3, கோலாா் மாவட்டத்தில் 2, யாதகிரி, குடகு மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.