பெங்களூரு

சுகாதாரத் துறையில் ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை

25th Jan 2020 09:01 AM

ADVERTISEMENT

சுகாதாரத் துறையில் சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க நாராயணா கண் மருத்துவமனையில் தலைவா் புஜங்க ஷெட்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் மோடிக்கு அவா் எழுதிய கடித விவரம்:

சா்வதேச அளவில் இந்தியா போன்ற பெரிய நாட்டில், சுகாதாரத் துறையில் சரக்கு சேவை வரி அதிக அளவில் உள்ளதால், மருத்துவமனைகள் மட்டுமின்றி, பொதுமக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். சரக்கு மற்றும் சேவை வரியால் நோயாளிகளின் செலவினங்கள் அதிகமாகியுள்ளது. இதனால் செலவை கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை பெற முடியாமல் பலா் தடுமாறுகின்றனா்.

எனவே, மருத்துவ உபகரணங்கள், நோயறிதல், பராமரிப்பு போன்றவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் அனைவரும் பயனடைவாா்கள் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT