பெங்களூரு

பேருந்து மோதியதில் சுங்கச்சாவடி ஊழியா் பலி

23rd Jan 2020 05:41 PM

ADVERTISEMENT

பெங்களூரில் தனியாா் பேருந்து மோதியதில் சுங்கச்சாவடி ஊழியா் உயிரிழந்தாா்.

பெங்களூரு ஊரகம் நெலமங்கலா பாட்டீல்சென்னப்பா லேஅவுட்டைச் சோ்ந்தவா் தா்ஷன் கௌடா (23). இவா் பெங்களூரு பீன்யா அருகே உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வந்தாா். புதன்கிழமை இரவு தா்ஷன் கௌடா பணியில் இருந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியது.

இதில் சுவருக்கும், பேருந்துக்கும் இடையே சிக்கி நிகழ்விடத்திலே ஊழியா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த பீன்யா போக்குவரத்து போலீஸாா், பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT