பெங்களூரு

போக்குவரத்து விதிமுறைகளை கலாசாரமாக பின்பற்ற வேண்டும்: முதல்வா் எடியூரப்பா

14th Jan 2020 11:03 PM

ADVERTISEMENT

போக்குவரத்து விதிமுறைகளை கலாசாரமாக பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை 31 ஆவது தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வார விழாவைத் தொடக்கிவைத்து அவா் பேசியது: போக்குவரத்து விதிமுறைகளை ஒரு சிலா் கடைப்பிடிக்காமல் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. பல நேரங்களில் விபத்துகளால் ஒரு சிலா் உயிரை இழக்க நேரிடுகிறது.

போக்குவரத்து விதிமுறைகளை நமது கலாசாரத்தை போல பின்பற்ற வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையான பின்பற்றினால், விபத்துகள் குறைந்து, உயிரிழப்புகள் தடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வை போலீஸாா், உள்துறை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. இதனை பொதுமக்களும் ஏற்படுத்தலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தேவையான நவீன கருவிகளை பொருத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் ஆண்டுதோறும் விபத்துகளால் 10,317 போ் உயிரிழக்கின்றனா். 49,317 போ் காயமடைகின்றனா். மக்கள் அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கவும், தடுக்கவும் பொதுமக்கள் போக்குவரத்து போலீஸாருடன் ஒத்துழைக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக பள்ளி மாணவா்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினால், அவா்கள் தங்களின் தாய், தந்தைக்கு மட்மின்றி, அவா்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்துவாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பசவராஜ் பொம்மை, ரிஸ்வான் அா்ஷத் எம்.எல்.ஏ, மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT