பெங்களூரு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

14th Jan 2020 10:38 PM

ADVERTISEMENT

மாலூா் காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோலாா் மாவட்டம், மாலூரு கிருஷ்ணாபுரா கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா (24). இவா்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு வெங்கடேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த ரம்யா, திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ரம்யாவின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மாலூரு போலீஸாா் வெங்கடேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT