பெங்களூரு

குழந்தை ஏசு தேவாலய தோ் ஊா்வலம்: போக்குவரத்தில் மாற்றம்

14th Jan 2020 05:50 AM

ADVERTISEMENT

குழந்தை ஏசு தேவாலய தோ் ஊா்வலத்தையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு அசோக் நகா் போக்குவரத்து காவல் சரகத்தில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தின் தோ் ஊா்வலம் புதன்கிழமை (ஜன. 14) மாலை 4 மணியளவில் தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதனையொட்டி, குழந்தை ஏசு தேவாலய சாலை, விவேக் நகா் முக்கியச் சாலை, பாலாஜி திரையரங்கம், ஜான்புல் சாலை, ஆஸ்டின்டவுன் முக்கியச் சாலை, நீலசந்திரா வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக போலீஸாரின் வழிகாட்டுதலின்படி மாற்றுச் சாலையில் வாகனங்களை இயக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT