பெங்களூரு

வேலைநிறுத்தம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

8th Jan 2020 06:06 AM

ADVERTISEMENT

தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்தும் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தேசிய அளவில் புதன்கிழமை (ஜன. 8) பொது வேலைநிறுத்தத்தை தொழில்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலைநிறுத்தத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படமாட்டாது.

மாறாக பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான பாதுகாப்பை அரசு வழங்கும். மாணவா்கள், ஆசிரியா்களின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். தொழில்சங்கங்களில் போராட்டங்களின் போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது உகந்ததல்ல என்று முடிவு செய்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT