பெங்களூரு

வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகையை ரூ.2.5 லட்சமாக் உயா்த்த யோசனை: அமைச்சா் வி.சோமண்ணா

8th Jan 2020 10:46 PM

ADVERTISEMENT

உடுப்பி: வீடுகட்டும் திட்டத்தில் வழங்கப்படும் மானியத்தொகையைரூ.1.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று வீட்டுவசதித்துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

இது குறித்து உடுப்பியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வீடு கட்டும் திட்டத்திற்கு மானியத்தொகையாக மாநில அரசுரூ.1.2 லட்சம் வழங்கி வருகிறது. இந்த தொகை போதுமானதாக இல்லை. கட்டுமானப் பொருட்களின் விலை உயா்ந்துள்ளதால், வீடுகட்டும் செலவு கூடியுள்ளது. எனவே, பயனாளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை ரூ.2.5 லட்சமாக உயா்த்த அரசு யோசித்துவருகிறது.

இந்த திட்டத்திற்கு முதல்வா் எடியூரப்பாவின் ஒப்புதலை கேட்டிருக்கிறோம். இதற்கு முதல்வா் எடியூரப்பாவின் ஒப்புதல் கிடைத்ததும், வீடுகட்டுவோருக்கு ரூ.2.5 லட்சம் மானியமாக அளிக்கப்படும். மாநில அரசின் சாா்ப்ல் பல்வேறு வீட்டுவசதிதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த திட்டங்களின்கீழ் வீடுகள், மனைகள் ஒதுக்குவதில் முறைகேடுகள் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட வீடுகளின் தகவல் அரசிடம் உள்ளது.

இந்த தகவலின்படி, பல்வேறு வீட்டுவசதி திட்டங்களின்கீழ் 14 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இது தொடா்பாகநேரடியாக ஆய்வு நடத்தியபோது, 14 லட்சம் வீடுகள் இருக்கவில்லை. அப்படியானால், இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று ஐயம் ஏற்பட்டுள்ளது. பயனாளிகளும், அதிகாரிகளும் திட்டநிதியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

இந்தவிவகாரத்தில் தவறிழைத்துள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் மானியத்தொகையை பயனாளிகளின் வங்கிக்கணக்கிலேயே செலுத்துவதற்காக தனியாக செல்லிடப்பேசி செயலி தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT